கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, April 4, 2007

கலைஞரும்,சோவும் பின்னே ஒரு பட்டரும்.

நண்பர்கள் கூடிய ஒரு சிறிய குடும்ப விழா அது.அதில் கலந்து கொண்ட ஒரு நண்பர் தான் திரு.பட்டர் அவர்கள்.
நண்பர்களின் அரட்டைப்பேச்சு ஒரு கட்டத்தில் அரசியலை நோக்கித் திரும்பியது.பட்டர் வீராவேசமாக "கருணாநிதியை
எனக்கு பிடிக்கவே பிடிக்காது.க, வை எதிர்க்கும் அனைவரையும் பிடிக்கும்.எனவே எனக்கு சோ,ஜெ போன்றவர்களை ரொம்ப
பிடிக்கும் என்றார்.
அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.அடுத்து தான் குண்டைப் போட்டார்.பாராளுமன்றத்தில் எஸ்.சி,எஸ்.டி இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு நடந்த விவாதத்தில் அவர்களுக்கு
இடஒதுக்கீடு கூடாது என்று எதிர்த்து பேசிய ஒரே ஒருவர் சோ தானாம்.தமிழகத்தில் இருந்து சென்ற அனைத்து எம்.பி க்களும்
ஆண்மையில்லாதவர்களாம்.
சோ ஒருவர் மட்டும் தான் ஆண்மையுள்ளவராம்.

இந்தப் பேச்சைக்கேட்டு மிரண்டு விட்டேன்.ஏனென்றால் பேசியவர் ஒரு B.C பிரிவைச் சேர்ந்தவர்.சோ என்னவோ பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு போராடுபவர் என்ற நினைப்பில் பேசும் அந்த நண்பருக்காக வருத்தப்பட்டேன்.
கடவுளே தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொள்ளும் இவர்களை மன்னியும் என்று வேண்டுவதைத் தவிர
வேறென்ன செய்ய?

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்