கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, November 29, 2006

கமலின் அன்பே சிவம் - ஒரு குதிரைப்பார்வை

கமலின் அன்பே சிவம் மனிதநேயத்தையும் காதலையும் எடுத்துக்காட்டும் அழகான படம் மட்டும் அல்ல. அதை குழி தோண்டி புதைத்த படமும் அது தான்.இவருடைய தியாகத்திற்கு பலியாடு கதாநாயகி.நம்முடைய மனைவியோ மகளோ விபத்தில் சிதைந்து வந்தால் அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டோமா?

செத்த வீட்டில் கூட பொணமா நாம தான் இருக்கனும் என்ற மட்டமான ஈகோ தான் கமலை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது.

படத்துக்கு பேரு மட்டும் பெத்த பேரா வச்சுட்டு க்ளைமாக்சை கெடுத்துட்டாங்க.

இல்லேன்னா கதாநாயகன் பேரான நல்லசிவம் என்பதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்.இதேபோல் ஹே ராம் படத்திலும் ஹீரோ பேரு ராம் என்று வைத்திருப்பார்.நிச்சயமா இது பேர்வைக்கும் கயமைத்தனம் தான்.

அடுத்து "வெள்ளையனே வெளியேறு" என்று படம் எடுத்தால் மறக்காமல் ஹீரோவுக்கு வெள்ளைச்சாமின்னு பேரு வைங்க.இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

கமலை விரும்புகிறேன்
அதற்கும் மேலாக கலையை விரும்புகிறேன்

Monday, November 27, 2006




முற்போக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்ணணியில் நிற்கும் இணைய கலைஞராம் "லக்கியாரின் " பாசமிகு வழித்துணைவன்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்