கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, October 1, 2009

பொறியியல் கல்லூரி இடஒதுக்கீடு







பொறியியல் கவுன்சிலிங்கில், முற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சேர்க்கை சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. தமிழகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படுகிறது. பொறியியல் கவுன்சிலிங்கில், பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 26.50 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதம், ஆதிதிராவிடருக்கு 15 சதவீதம், அருந்ததியினருக்கு 3 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 31 சதவீத இடங்கள், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக ஒதுக்கப்படுகின்றன.


இந்த ஆண்டு, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 995 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 ஆயிரத்து 362 பேர் (11.13%) முற்படுத்தப்பட்ட வகுப்பினர். 5,737 பேர் (4.45%) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள். 1,615 பேர் (1.25%) அருந்ததியினர். 61 ஆயிரத்து 770 பேர் (47.89%) பிற்படுத்தப்பட்டவர்கள். 28 ஆயிரத்து 492 பேர் (22.09%) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 16 ஆயிரத்து 611 பேர் (12.88%) ஆதிதிராவிடர். 408 பேர் (0.32%) பழங்குடியினர்.


இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 83 ஆயிரத்து 552 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 5,244 பேர் (6.28%) முற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3,655 பேர் (4.37%) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள். 1,179 பேர் (1.41%) அருந்ததியினர். 41 ஆயிரத்து 449 பேர் (49.67%) பிற்படுத்தப்பட்டவர்கள். 20 ஆயிரத்து 147 பேர் (24.11%) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 11 ஆயிரத்து 549 பேர் (13.82%) ஆதிதிராவிடர். 279 பேர் (0.33%) பழங்குடியினர்.


பொறியியல் மாணவர் சேர்க்கையில், முற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சேர்க்கை சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்துள்ளது.


2005ம் ஆண்டில் 10.13 சதவீதமாக இருந்த முற்படுத்தப் பட்டோர் சேர்க்கை சதவீதம், 2006ம் ஆண்டில் 9.82 சதவீதமாகவும், 2007ம் ஆண்டில் 8.11 சதவீதமாகவும், 2008ம் ஆண்டில் 6.74 சதவீதமாகவும், 2009ம் ஆண்டில் 6.28 சதவீதமாகவும் சரிந்துள்ளது.


அதேபோல, 2005ம் ஆண்டு 21.83 சதவீதமாக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கை சதவீதம், 2006ம் ஆண்டு 20.98 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டுகளில் இப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2007ம் ஆண்டில் 22.70 சதவீதம் பேர், 2008ம் ஆண்டில் 23.78 சதவீதம் பேர், 2009ம் ஆண்டில் 24.11 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 53 - 54 சதவீத அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆதிதிராவிடர் பிரிவில், கடந்த ஆண்டுகளில் 14 - 15 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர். பழங்குடியினர் பிரிவில், 0.5 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை.


நன்றி‍‍‍‍ தினமலர்

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்