//இந்திரா சவானி வழக்கில், எல்லாவகையான இடஒதுக்கீடுகளும் 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று 16.11.1992 ல் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டில் 69 சதம் நீடிக்கத் தேவையான சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி காத்த வீராங்கனைகள், வீராங்கன்கள் போன்ற பட்டங்களை ஆட்சியாளர்களுக்கு பெற்றுத் தந்த இச்சட்டத்திருத்தம் உள்ளிட்ட இடஒதுக்கீடு சட்டங்கள் எல்லாமே வெறும் ஏட்டளவு எண்ணிக்கையாக மாறிக் கொண்டிருப்பதும், அந்த ஏட்டளவு இடஒதுக்கீட்டையும் இல்லாமல் ஆக்குவதுமாகிய நிலைமையுமே இப்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஆகும்.
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணிநியமனம் நடைபெறுகிற போதே ஏட்டில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். ஆனால் பணியாளர் தேர்வு வாரியங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆளெடுத்து வந்த காலத்திலேயே சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படவில்லை. பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி நடைமுறையில் இடஒதுக்கீட்டின் பலன் உரிய மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் உயர்சாதி மனோபாவம் தனது வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இடஒதுக்கீட்டின்படியான வேலைவாய்ப்பை மறுப்பதன் மூலம், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கையில் ஊதியமாகவும் சலுகைகளாகவும் புழங்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை முடக்கி அவர்களை சமூகரீதியிலும் பொருளாதாரத்திலும் மேலெழ முடியாதவர்களாக ஒடுக்கும் புதிய தந்திரம் மிக நுட்பமாக கையாளப்படுகிறது.
ஆதவன் தீட்சண்யா//
ஜெயா ஆட்சியில் கஜானா காலி என்று காரணம் சொல்லி புதிய பணியிடங்களை நிரப்பாமல் இழுத்தடித்ததின் உண்மைக்காரணம் இப்போது தான் தெரிகிறது.அரசு ஊழியர்களை நாயினும் கீழாக நடத்தத் துணிந்ததின் வன்மத்தையும் புரிந்து கொள்ளலாம்.இடஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கை எம்ஜிஆரின் காலத்திலேயே முயற்சி செய்யப்பட்டது.பொருளாதார ரீதியான இடஒதுக்கீடுக்கு அவர் முயன்ற போது எதிர்க்கட்சிகளின் தீவிர போராட்டத்தினால் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.தன்னுடைய வேட்டியை உருவி விடுவார்களோ என்ற பயத்தில் 27% இருந்ததை தடாலடியாக 50% உயர்த்தியதாகவும் ஞாபகம்.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க ஜெ யை சமூக நீதி காத்த வீராங்கனை என்று வேறு சொல்லி சிலாகித்துக் கொள்கிறார்கள்.வடிவேல் ஜோக் ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது.50 ரூபாய் கடன் கேட்டு ஒருவன் வருவான்.அவனிடம் 50 ரூபாய் போதுமா,இன்னும் கேளு இன்னும் கேளு என்று சொல்லி கடைசியில் 500 ரூபாய் கொடுங்கண்ணே என்று கேட்பான் கடன் கேட்டு வந்தவன்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு அண்ணனை நம்பி 500 ரூபாய் கேட்டாயே,ரொம்ப பெருமையா இருக்குடா,ஆனா இப்ப எங்கிட்ட அஞ்சு பைசா கூட இல்லையே என்று கூலாக சொல்வார் வடிவேலு.தூ என்று காறித்துப்பி விட்டு செல்வான் கடன் கேட்டவன்.
ஜெ க்கு பின் அமைந்த கலைஞர் ஆட்சியில் லட்சக்கணக்கில் புதிய ஊழியர்களை
தேர்ந்தெடுத்துள்ளனர்.இவருக்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை.பணம் தேவையில்லை ,செய்வதற்கு மனம் இருந்தால் போதும்.
கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.
Tuesday, January 15, 2008
Subscribe to:
Posts (Atom)
Labels
- WHERE DO YOU WANT TO GO TODAY? (1)
- இந்திய தேசியம் (2)
- எய்ட்ஸ் (1)
- ஒலிம்பிக் (1)
Blog Archive
- November 2006 (2)
- December 2006 (1)
- March 2007 (2)
- April 2007 (1)
- June 2007 (10)
- July 2007 (10)
- August 2007 (4)
- September 2007 (9)
- October 2007 (5)
- November 2007 (6)
- December 2007 (4)
- January 2008 (1)
- March 2008 (2)
- April 2008 (2)
- May 2008 (2)
- June 2008 (1)
- August 2008 (2)
- September 2008 (3)
- October 2008 (2)
- November 2008 (4)
- January 2009 (1)
- February 2009 (1)
- May 2009 (2)
- June 2009 (1)
- July 2009 (1)
- October 2009 (1)
- January 2010 (1)
- June 2010 (1)