Thursday, November 27, 2008
இலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.
இந்தியாவிலும் ஒரு பண்டாரநாயகா இருக்கிறார்.அவர் பெயர் அத்வானி.இந்த நடமாடும் பிணத்தின் நாசகார சிந்தனைகளால் இந்தியா இன்று தாங்கொணா இன்னல்களை அனுபவித்து வருகிறது.சாதியால் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் வாழவகை செய்யும் மண்டல் கமிசனை அமுல்படுத்த வி.பி.சிங் அரசு முயன்ற போது அத்வானியின் உள்ளிருக்கும் சாத்தான் விழித்தது. பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களும் வருவதா? அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே? என்றெல்லாம் சிந்தித்து அந்த மண்டல் கமிசனை இல்லாது ஒழிக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டத்திற்கு கிடைத்த பலியாடு, முஸ்லிம் மக்கள். பத்துபைசா பிரயோஜனம் இல்லாத பாபர் மசூதியை உடைத்த பொழுது இந்தியா என்னும் நாட்டை தான் நாம் உடைக்கப்போகிறோம் என்பதை அவர் உணரவில்லை.
பேரினவாதம்,மதவாதம் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவன் விரலைச்சூப்பிக்கொண்டா உட்கார்ந்திருப்பான்.காயம்பட்ட அவனது மனது எந்த ஒருகொடூர செயலையும் செய்ய துணிந்து விடுகிறது.எந்த ஒரு குற்றத்திற்கும் மோட்டிவ் (motive) ஒன்று உண்டு.இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு மோட்டிவ், அத்வானி அன்கோ தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கை காட்டலாம்.
அத்வானி மட்டுமல்ல அவர்தம் கொள்கைகளும் நடமாடும் பிணம் தான்.அந்தப்பிணங்களுக்கு மக்கள் என்றைக்கு சமாதி கட்டுகிறார்களோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.
பி.கு:
இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.
Wednesday, November 26, 2008
சீனு அவர்களுக்கு பகிரங்க தந்தி
ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க? 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.//
இந்தியா என்னும் மாட்டுக்கொட்டடியில் இருந்து எதையும் பிடுங்க முடியாது.தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் மதிப்புக்குறையாத வண்ணம் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.
//காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.//
அனானி, மனிதநேயம் என்பதற்கு முன்னால் தேசியம்,தேசபக்தி என்பது எல்லாம் அவற்றின் மீது ஒன்னுக்கடிக்க கூட தகுதியில்லாதவை . உங்களைப் போன்ற ஆசாமிகளை கழுவில் ஏற்றினால் தான் நாடு விளங்கும்.
முற்போக்காளரையும் விஞ்சிய அதிமுற்போக்காளர்களுக்கு இந்தச்சுட்டி .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=532
Friday, November 7, 2008
கறுப்பரசன் ஒபாமா
இந்தியா , அமெரிக்காவை விட மாபெரும் ஜனநாயக நாடு,அதிலும் மதச்சார்பற்ற நாடு என்பதில் நமக்கெல்லாம் பெருமை தான்.மதச்சார்பற்ற நாடு என்பது அதிகாரபூர்வமாக இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த பிரதமர் பதவிக்கு ஒரு முஸ்லிமையோ, அல்லது தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவரையோ வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு மனவளர்ச்சி எந்தக்கட்சிக்கும் இல்லை.அமெரிக்காவிலே நடந்துள்ள மாற்றமானது இந்தியாவிலும் எதிரொலிக்க வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு பொன்னாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
Saturday, November 1, 2008
இந்திய தேசியம்
நேபாளம் இந்துநாடு தானே என்று அதை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடியுமா? முடியாது.இலங்கையில் இருக்கும் தமிழர்கள், இந்துக்கள் தானே மற்றும் ஸ்ரீலங்கா என்னும் பெயரே சமஸ்கிருதம் தானே , அதனால் அது இந்து தேசியத்தில் இருப்பது தானே முறை என்று சொல்லி இலங்கையை இணைத்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது . இதிலிருந்து இந்தியாவை இணைத்து வைத்திருப்பது அரசியலமைப்புச்சட்டம் தானே,தவிர இந்துமத உணர்வோ,கலாச்சார ஒற்றுமையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வெள்ளைக்காரன் போட்ட பெவிகால் 50,60 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்து உள்ளது.அந்த பெவிகால் ஒட்டு உதிர்ந்துவிடும் சூழலை நோக்கி தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்துதேசியம் பேசிக்கொண்டு பிஜேபி போன்ற கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இந்துதேசியமானது இந்தியா சிதறுண்டு போவதிலிருந்து எத்தனை ஆண்டுகள் காப்பாற்றும் என்பது நம்முள் எழும் மிகப்பெரிய கேள்வி.
இந்தியாவில் வாழும் பலநூற்றுக்கணக்கான இனமக்களில் தமக்கான உரிமைகளையும்,மரியாதையையும் போராடிப்பெற்ற இனங்கள் பலவுண்டு(தமிழ்நாடு),போராடாமலே பெற்ற இனங்கள் சிலவுண்டு. என்னதான் போராடினாலும் அதையெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத இனங்கள் நிறையவே உண்டு.அப்படிப்பட்டவர்களை தனியாகப்பிரிந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.அதனால் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. வெறும் 12,000 மக்கள்தொகை கொண்ட டுவாலு என்ற நாட்டுக்கு பிரிட்டன் விடுதலை அளித்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பேரினவாதம்,பெரும்பான்மை வாதம் போன்றவை நமக்கு நாமே குண்டு வைத்துக்கொள்ளும் திட்டம் தாம்.
தொடர்புடைய இடுகைகள்:
http://baluindo.blogspot.com/2008/10/blog-post_5013.html
http://www.maraneri.com/2008/10/blog-post_23.html
Thursday, October 30, 2008
Tuesday, October 28, 2008
வல்லவனுக்கு வல்லவன் - II

இரண்டடி நீளத்தில் பத்துப்பதினைந்து கிலோ எடை கூட தேறாத அவனைப்பார்த்ததுமே சிங்கங்கள் கிலியாகிவிட்டன.நிமிர்ந்த நடையும்,நேர்கொண்ட பார்வையுமாக வருபவனை விரட்டும் முயற்சியில் இறங்கின சிங்கங்கள்.சுற்றிச்சுற்றி வரத்தான் முடிந்ததே தவிர அவனுடைய முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.நிதானமாக ஒவ்வொரு அடியாக முன்னேறிக்கொண்டிருக்கிறான் பல்லியன். மூன்று சிங்கங்கள் விரட்டும் முயற்சியைக்கைவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. ஒரு சிங்கம் மட்டும் தைரியத்தை இழக்காமல் களத்தில் இருந்தது.பயப்படும் அறிகுறி பல்லியிடம் இல்லை.ஒரு அடி முன்னால் வந்து உறுமிக்காட்டுவதும் இரண்டு அடி பின்னால் ஓடுவதுமாக சிங்கத்தின் நிலை பரிதாபமாக ஆகிக்கொண்டிருந்தது.பின்னணியில் போடா போடா புண்ணாக்கு பாட்டு ஒன்று பாடாதது தான் குறை. இறுதியில் பல்லி வென்றே விட்டது,மிச்சமிருந்த சிங்கமும் வாலைச்சுருட்டிக்கொண்டு பங்காளிகளுடன் போய் சேர்ந்து கொண்டது.நான்கு சிங்கங்களின் பாதுகாப்பு அரணோடு பல்லியன், எருமையின் மீதேறி வயிற்றுக்குள் தலையைவிட்டு சாப்பிட ஆரம்பித்ததைப் பார்க்கும் யாவரும் வாயைப்பிளக்காமல் இருக்கமுடியாது.
கொடிய விசமுள்ள நாகப்பாம்பும் கூட பல்லியின் முன் மண்டியிடுகிறது.நாகத்தை நார்நாராகக்கிழித்துத் தொங்கவிடும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.காட்டுராஜா சிங்கம் என்பதை மீள்பரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.
நன்றி-டிஸ்கவரி சேனல்வல்லவனுக்கு வல்லவன் - I
Tuesday, September 23, 2008
கோவியாருக்கு எச்சரிக்கை
கொஞ்சம் அரசியல்
எம்ஜியார் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை படிக்க நேர்ந்தது. திமுகவை விட்டு விலகிய பின் எம்ஜியார் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல். அதில் போட்டியிட்ட மாயத்தேவரை விளிக்கும் போதெல்லாம் மாயன் என்றே விளித்தாராம்.அதனால் அவர் சாதியைக்கடந்தவராம். ஆனால் மாயன் என்ற பெயரில் மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருந்தவருக்கு மாயத்தேவர் என்ற பெயர் சூட்டி தேர்தலில் நிற்க அனுமதித்தவரே எம்ஜியார் தான்.சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்ளும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட திராவிட இயக்கங்களின் தலையில் மண் அள்ளிப்போடும் விதமாக சாதிப்பெயருடன் ஒருவரை தேர்தலில் நிற்க அனுமதித்தது தவறில்லையாம், சாதிப்பெயரை தவிர்த்துவிட்டு மேடையில் பேசியது உயர்வான செயலாம். என்னாங்கடா உங்க வார்த்தை ஜாலம்.
35 ஆண்டுகளுக்கு முன்பே சாதி அரசியலுக்கு வழிவகுத்தவர் எம்ஜியார்.இத்தனை வருடங்களில் சாதியில்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையிலும் கலைஞர் சென்ற சட்டமன்ற தெர்தலின் போது மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒச்சாத்தேவர் என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்ட போது சாதி்ப் பெயருடன் கூடிய வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல மூ.மு.க கூட்டணியை விட்டு விலகியதும் வரலாறு.
அடுத்து சினிமா
சமீபத்தில் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் அஞ்சாதே,மற்றும் வேட்டையாடு விளையாடு. இதே கதையுள்ள இரண்டு ஆங்கிலப்படங்களை பார்த்தேன் . DEVIL'S OWN, மற்றும் BONE COLLECTOR. அஞ்சாதே, டெவில்ஸ் ஓன் படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். வேட்டையாடு விளையாடு போன் கலெக்டரின் அப்பட்டமான காப்பி.
Monday, September 22, 2008
இலக்கிய மனமும், இளகிய மனமும்
ஆனால் இவ்வாறில்லாமல்
"கண்ணுக்குள் பாவை போல் உருண்டிடும் உள்ளம்
கைம்பெண்ணுக்கும் உண்டென்று உணர்ந்திடுவாய்"
என்று எழுதினால் அது பிரச்சாரத்தன்மையுடையதாகி விடுகிறது , அதனால் இது இலக்கியம் இல்லை என்றாகி விடுகிறது. அதனால் இதை எழுதிய கலைஞர் இலக்கியவாதி இல்லை, என்ன கொடுமை?:-(.
இலக்கியச்சுவையும்,படித்து சிலாகிப்பதும் மட்டும் தானா படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டாமா?.அந்த வகையில் புதுமைப்பித்தனை விட கலைஞரே மேலானவராக எனக்குத்தோன்றுகிறார். எனது எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே ஈழத்தைச்சேர்ந்த இலக்கியவாதி தளையசிங்கம் கலைஞரைப் பற்றி மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
"அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி"
(நன்றி-ராஜநாயஹம்)
மனித மனத்தினை ஆழ்ந்து ஆராய்ந்து பீராய்ந்து எழுதுவதை விட மனித மனத்திலே மாற்றத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களே பிடித்திருக்கிறது.
Sunday, August 24, 2008
அதிகாரின்னா இப்படி இருக்கணும்
சின்னமனூர்: "எச்.ஐ.வி., (எய்ட்ஸ்) இல்லா தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம்' செய்து வைக்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, சின்னமனூர் மறவர் மக்கள் மன்ற திருமண மண்டப நிர்வாகிகள் அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்யும் புதுமண தம்பதிகள் எச்.ஐ.வி., பரிசோதனை செய்ய வேண் டும் என்ற விதிமுறை உள்ளது.கடந்த வாரம் மணமகனுக்கு எச்.ஐ.வி., உள்ளது பரிசோதனையில் உறுதியானதால் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மணமகளுக்கும், சின்னமனூரை சேர்ந்த மணமகனுக்கும் இங்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது.
இந்த திருமண மண்டபத்தை 52 பேர் கொண்ட நிர்வாக குழு நிர்வகித்து வருகிறது. இக்குழுவினர் தலைவர் திருவாணன் 37 ஆண்டுகள் சுகாதாரத்துறையில் வட்டார சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மண்டப நிர்வாகியாக பொறுப்பேற்றதும் திருவாணன் "மறவர் சமூகத்தில் எச்.ஐ.வி., இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம்' என்று இவர் கொண்டு வந்த திட்டத்திற்கு 52 நிர்வாக குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இத்திட்டத்தை மறவர் சமுதாய மக்களும் ஏற்று திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனை செய்தனர். இங்கு திருமணம் முடிக்கும் மற்ற சமுதாய மக்களும் இவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து எச்.ஐ.வி., பரிசோதனை செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகாலமாக இங்கு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை நடத்தப்பட்டாலும், கடந்த வாரம் தான் மணமகனுக்கு பரிசோதனையில் எச்.ஐ.வி., கண்டறியப்பட்டு ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த சுகாதாரத்துறை கருத்தரங்களில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய டாக்டர் இந்த திருமண மண்டபத்தில் அமல்படுத்தப்படும் விதிமுறை குறித்து தெரிவித்த போது, அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி வரவேற்று உள்ளனர். இந்த குழுவினரின் நடவடிக்கையை முன் உதாரணமாக ஏற்று அரசு திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
அனைவரின் வரவேற்பையும் பெற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ள இத்திருமண மண்டப தலைவர் திருவாணன், பொருளாளர் சிவானந்தன், துணை தலைவர் சந்திரன் கூறியதாவது: அனைத்து தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளதால் திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனை என்ற திட்டத்தை நிச்சயத்திற்கு முன்னர் வைக்க திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் வைத்து 3 மாதங்கள் கழித்து திருமணம் முடித்தால் மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி., சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். அடுத்து எங்கள் சமுதாய இளைஞர்களுக்கு இலவச எச்.ஐ.வி., விழிப்புணர்வு பரிசோதனை முகாம் கருத்தரங்கு நடத்த உள்ளோம். மற்ற சமுதாயத்தினரிடம் எங்கள் கருத்துக்களை திணிக்க முடியாது. ஆனால் பின்பற்றுபவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்வோம். அரசு இதனை சட்டமாகவே கொண்டு வரலாம். இவ்வாறு தெரிவித்தனர்.
Wednesday, August 20, 2008
ஜோதிடத்தின் மகிமை
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=4118&ncat=DI&archive=1&showfrom=8/18/2008
தன் மகனை தானே கொன்றுவிட்டு வாழ்க்கை முழுக்க நரகவேதனையை சுமந்துதிரியும் எண்ணற்ற அப்பாவிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.மகனையே கொலை செய்யும் அளவுக்கு மனதில் நஞ்சை விதைத்த ஜோசியக்காரருக்கும் இந்தக்கொலையில் பங்குண்டு, ஆனால் இப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை.
சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் முன் பிச்சைக்காரர்களுடன் சேர்த்து ஜோசியக்காரர்களையும் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். சீனா தங்கமாக குவித்துக்கொண்டிருக்கிறது. இதை நாமும் பின்பற்றினால் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலாம்.
Friday, June 6, 2008
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆளுக்கொரு குட்டி யானை பரிசளித்து தான் யானை போன்ற வல்லமையுடையவன் என்று குறிப்பால் உணர்த்தினார் டிபிசிடி. பாபாவின் தமிழ் வலையுலகம்,இணையத்தமிழ் மீதான ஆர்வம் அவரது கேள்விகளிலிருந்தே உணர முடிந்தது,சரமாரியாக போட்டு வாங்கிக்கொண்டிருந்தார். டிபிசிடி குற்றால அருவி போல் கொட்டிக்கொண்டிருந்தார்.குறைவாகப் பேசுவன் நான் தான் என்னும் குறையைத் தீர்த்து வைத்தார் சீனா ஐயா.தருமி ஐயா உற்சாகமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.எல்லோரிடத்தும் நண்பராக இருப்பது எப்படி என்பதை பாபாவிடம் டியூசன் வைத்து கற்றுக்கொள்ள வேண்டும்,திராவிட இயக்க அரசியலின் தேவையையும்,அதிலுள்ள நியாயத்தையும் உணர்ந்தவராகவே எனக்கு அவர் தோன்றினார்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.
மதுரை நகரின் நல்ல ஒரு உணவு விடுதியான காலேஜ் ஹவுசில் சிற்றுண்டி முடித்துவிட்டு டிபிசிடி,மற்றும் சீனா ஐயா கிளம்பினர்.நான்,தருமி ஐயா,பாபா,அவரின் சகோதரர் அதற்குப்பிறகும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம்.மனதுக்கு நிறைவான ஓர் அனுபவமாக இருந்தது.நன்றி அனைவருக்கும்.
Saturday, May 3, 2008
மேகங்களினூடாக ஒரு பாலம்





வாய் பிளக்க வைக்கும் மனிதனின் மகத்தான சாதனை. இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே ஆயிரம் அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம், உலகின் உயரமான பாலம்.பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை பார்க்கும் போது வெள்ளைக்காரன்,வெள்ளைக்காரன் தான்யா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.இந்தியாவுடன் ஒப்பிடும் போது பிரான்ஸ் ஒரு துக்கடா நாடு.அவர்களால் எப்படி இதை செய்து காட்ட முடிந்தது? அங்கே மனிதகுல வளர்ச்சிக்கு கடவுளை நம்புவதை விட அறிவியலையும்,தொழில்நுட்பத்தையும் நம்புகிறார்கள்.ஆனால் இங்கேயோ அறிவியலை நம்புவதை விட கடவுளை நம்புவது தான் சிறப்பானதாக கருதப்படுகிறது, மேலும் கடவுளிடம் பிச்சையெடுப்பதே ஆகச்சிறந்த ஆன்மீகமாகவும் கருதப்படுகிறது.மக்களின் மதவுணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளும் குள்ளநரிகளும்,பன்றிப்பிறவிகளும் நிறைந்துள்ள நம்நாடு கடைத்தேற ஏதாவது வழியுள்ளதா?
அதற்கு கலைஞரைப்போன்ற பகுத்தறியும் திறனும்,நிர்வாகத்திறமையும் அமையப்பெற்ற தலைமை இந்திய அளவில் தோன்ற வேண்டும். ஆன்மீகக் குள்ளர்கள் நிறைந்த நம்நாடு போக வேண்டிய தொலைவு வெகுதூரம். இக்குள்ளர்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை , வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடாமலிருந்தாலே நாடு வளம்பெறும்.இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும்படி என் அப்பன் பிரிடேட்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.
Friday, May 2, 2008
சுப்ரீம் கோர்ட்டில் இலைக்காரன்
http://www.dinamalar.com/fpnnews.asp?pg=0&news_id=596
Wednesday, April 23, 2008
Saturday, April 19, 2008
என் கன்னத்தில் அடி.உனக்கு மூன்று ரூபாய் தருகிறேன்.
தினமலரின் இணையப்பதிப்பில் பின்னூட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.வழக்கம் போல் அம்பியர் கும்மி அருமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே 27% இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிற ,போராடுகிற தலைவர், கலைஞராகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.இது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்ளும் செய்தியாக இருக்கிறது.வடநாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததே வேதனைக்கு காரணம்.க்ரீமி லேயர் பிரச்சினையில் வட இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளும் கலைஞரின் செயல்களையே முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புகின்றன.
க்ரீமி லேயர் பற்றிய கலைஞரின் கருத்தை தினமலர் இன்று வெளியிட்டுள்ளது.(http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=484&cls=row4)அதில் பின்னூட்டங்களை ஆங்கிலத்திலேயே வெள்ளைக்காரக்குஞ்சுகள் இட்டுள்ளனர்.கலைஞரை ஆதரித்து நான் ஒரு பின்னூட்டம் இட்டேன்.
"இடஒதுக்கீடு பிரச்சினையில் இந்தியாவிலேயே ஓங்கி ஒலிக்கும் குரல் கலைஞருடையது தான்.பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்றென்றும் கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்"
இதை ஒரு பயங்கரமான பின்னூட்டமாக கருதி இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கின்றனர்.தினமலரையும் காசு கொடுத்து வாங்கி சவுக்கடி வாங்கும் மக்களை நினைத்தால் கூட பாவமாக இல்லை.அவர்களுக்காக கரடியாக கத்திக்கொண்டிருக்கும் கலைஞரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.
(தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?தமிழ்ப்பதிவுகளுக்கு இந்தியில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள் என்று அனாதை ஆனந்தன் ஓரிடத்திலே குறிப்பிட்டிருந்தார்.தமிழ் செய்திக்கு ஆங்கிலத்திலே பின்னூட்டம் போடும் நாதாறிகளே,திருந்தவே மாட்டீர்களா?)
Thursday, March 27, 2008
பேரைக்கேட்டாலே பேதியாகுதுல்ல
நீங்கள் எல்லாம் மணியாட்டுவதோடு நிறுத்திக்கொண்டால் கருணாநிதி ஏன் உங்களை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார் என்று கேட்க நினைத்து வாய்வரை வார்த்தை வந்துவிட்டது.அவருடைய வயது கருதி பேசாமல் இருந்து விட்டேன்.
இவர் வயதானவர் என்றால் இன்னொருவர் இளவயதினர்.என் கடையின் வாடிக்கையாளர்.எப்போதாவது முரசொலி இதழ் வாங்குவதுண்டு.அதைக் கண்ணுற்ற அவர்,'ஆ,இதெல்லாம் கடைகளுக்கு ஓசியா போட ஆரம்பிச்சுட்டாய்ங்களா?' என்று கிண்டலாக கேட்டார்.வாடிக்கையாளர் என்பவர் நமக்கு ராஜா மாதிரி என்று படித்திருந்ததால் ராஜா சொன்ன ஜோக்குக்கு லேசாக சிரித்தேன்.உடனே அடுத்த மேட்டருக்கு தாவினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ராஜா , டில்லியில் பிரபலமாகிக்கொண்டிருந்த நேரம் .'இவனுக்கெல்லாம் நேரத்தைப் பாருங்க , டிவியில உட்கார்ந்து எந்த நேரமும் பேசிக்கிட்டே இருக்கிறானே.மத்திய அரசு பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துகிறார்களே அதற்காக எதையாவது பேசுகிறானா பாருங்கள் என்றார்.எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
சாதித்திமிரை காட்டிவிட்டானே என்று அடக்க முடியாத கோபத்துடன் 'ஆமாங்க,ஜோசியம் பாக்குறதுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கணும்னு சொன்னானே ஜோஷி,அந்த வெண்ணை மாதிரி ஊருக்கு நாலு பேரு இருந்தா போதும்,இந்தியா வெளங்கிடும்' என்று சொன்னேன்.அந்த வாடிக்கையாளர் கோபித்துக்கொண்டு போனவர் தான் திரும்பி வரவேயில்லை.
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் முற்போக்கு பேசுபவர்களைக் கண்டாலே பலர் ஆசனவாயில் மிளகாய்த்தூளை கொட்டியது போல் எரிகின்றனர்.இந்த எரிச்சல் நீங்க ஒரே வழி மணியாட்டுவதைத் தவிர்த்து பிற தொழிலில் ஈடுபட்டாலே தாங்கள் அணிந்திருக்கும் நூலைக் கழற்றி வைத்து விட வேண்டும்.
Monday, March 3, 2008
சுஜாதாவின் புரட்சி சிந்தனை
காஷ்மீர் இந்தியாவுக்கு தேவையில்லை,அதை தனி நாடாக உருவாக்கி அதற்கு நம் ஆதரவை தருவதே முறையானதாக இருக்கும்.இப்படிப் பேசுபவனை தேசத்துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.ஆனால் மிதவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சுஜாதா அவர்களே அங்கு நடக்கும் கொடுமை கண்டு மனம் வெறுத்து, காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில் இருந்து அதை பிரித்து கொடுத்து விடலாம்,அதற்குத் தேவை POLITICAL WILL மட்டுமே என்று எழுதியிருந்தார்.(2006 கடைசி மாதங்களில் ஆ.வி யில்).சுஜாதா எழுத்தின் மேல் இருந்த மதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே போய்விட்டிருந்தாலும் காஷ்மீர் பிரச்சினையில் அவரது கருத்து ஒன்றுக்காகவே அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவருடைய அறிவியல் எழுத்து தான் அவர்பால் என்னை மிகவும் ஈர்த்திருந்தது.அப்படிப்பட்டவர் ஒரு ஆன்மீகப் பத்திக்கையில் ஆன்மீக அன்பர்களை திருப்திப் படுத்தும் நோக்கில் எழுதிய ஒரு சிறு நூல் அவர் மேல் இருந்த ஆர்வத்தை பெரிதும் குறைத்து விட்டது.ஆனால் அவருடைய செயல் தந்திரம் சிறப்பானது தான்,பெரும்பாலானோருக்கு பிடிக்காத ஒன்றை சொல்வதற்கும் ஒரு WILL வேண்டும்.அது அவரிடம் இல்லை.
ஆனால் தமிழுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் உணர முடிகிறது.
கார்ல் சாகன் எழுதிய காஸ்மாஸ் நூலை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு என் நன்றி.
Tuesday, January 15, 2008
வாயிலே அல்வா கிண்டிய வீராங்கனை
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணிநியமனம் நடைபெறுகிற போதே ஏட்டில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். ஆனால் பணியாளர் தேர்வு வாரியங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆளெடுத்து வந்த காலத்திலேயே சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படவில்லை. பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி நடைமுறையில் இடஒதுக்கீட்டின் பலன் உரிய மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் உயர்சாதி மனோபாவம் தனது வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இடஒதுக்கீட்டின்படியான வேலைவாய்ப்பை மறுப்பதன் மூலம், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கையில் ஊதியமாகவும் சலுகைகளாகவும் புழங்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை முடக்கி அவர்களை சமூகரீதியிலும் பொருளாதாரத்திலும் மேலெழ முடியாதவர்களாக ஒடுக்கும் புதிய தந்திரம் மிக நுட்பமாக கையாளப்படுகிறது.
ஆதவன் தீட்சண்யா//
ஜெயா ஆட்சியில் கஜானா காலி என்று காரணம் சொல்லி புதிய பணியிடங்களை நிரப்பாமல் இழுத்தடித்ததின் உண்மைக்காரணம் இப்போது தான் தெரிகிறது.அரசு ஊழியர்களை நாயினும் கீழாக நடத்தத் துணிந்ததின் வன்மத்தையும் புரிந்து கொள்ளலாம்.இடஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கை எம்ஜிஆரின் காலத்திலேயே முயற்சி செய்யப்பட்டது.பொருளாதார ரீதியான இடஒதுக்கீடுக்கு அவர் முயன்ற போது எதிர்க்கட்சிகளின் தீவிர போராட்டத்தினால் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.தன்னுடைய வேட்டியை உருவி விடுவார்களோ என்ற பயத்தில் 27% இருந்ததை தடாலடியாக 50% உயர்த்தியதாகவும் ஞாபகம்.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க ஜெ யை சமூக நீதி காத்த வீராங்கனை என்று வேறு சொல்லி சிலாகித்துக் கொள்கிறார்கள்.வடிவேல் ஜோக் ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது.50 ரூபாய் கடன் கேட்டு ஒருவன் வருவான்.அவனிடம் 50 ரூபாய் போதுமா,இன்னும் கேளு இன்னும் கேளு என்று சொல்லி கடைசியில் 500 ரூபாய் கொடுங்கண்ணே என்று கேட்பான் கடன் கேட்டு வந்தவன்.எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுவிட்டு அண்ணனை நம்பி 500 ரூபாய் கேட்டாயே,ரொம்ப பெருமையா இருக்குடா,ஆனா இப்ப எங்கிட்ட அஞ்சு பைசா கூட இல்லையே என்று கூலாக சொல்வார் வடிவேலு.தூ என்று காறித்துப்பி விட்டு செல்வான் கடன் கேட்டவன்.
ஜெ க்கு பின் அமைந்த கலைஞர் ஆட்சியில் லட்சக்கணக்கில் புதிய ஊழியர்களை
தேர்ந்தெடுத்துள்ளனர்.இவருக்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை.பணம் தேவையில்லை ,செய்வதற்கு மனம் இருந்தால் போதும்.
Wednesday, December 26, 2007
மோதி vs கலைஞர்
சிறுபான்மை முஸ்லிம்களை எதிர்த்து அரசியல்
செய்யும் மோதியும் , சிறுபான்மை பார்ப்பனர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கலைஞரும் ஒன்று தானா?
தங்களுடைய ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு கண் , காது ஒட்டவைத்து ஈறைப் பேனாக்கி,பேனைப் பெருமாளாக்கி அதை வைத்து அரசியல் செய்வது உலகம் முழுவதுமுள்ள
அரசியல் , ஆதிக்கவெறியர்களின் வேலை தான்.
ஆனால் பிஜேபியின் கேடுகெட்ட அரசியல் வி.பி.சிங் தலைமையிலான மாபெரும் எழுச்சியை சகிக்க முடியாமல் ஆரம்பமானது.இந்து,சந்து என்று முழக்கமிடும் பி.ஜே.பி அதே இந்துக்களின் நலன் காக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே ராமர் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்தது.
அவர்களே அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இப்படியொரு ஆதரவை இந்திய மக்கள் தருவார்கள் என்று.சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் கடன் வாங்கி காவடி தூக்கும் மக்கள் நிறைந்த இந்தியாவில் அவர்களுக்கும் இடம் கிடைத்தது.
முஸ்லிம் என்ற ஒரு பொது எதிரியை உருவாக்கி இந்து வெறியை வென்றெடுத்துள்ளது பி.ஜே.பி.
இதற்காக அவ்வப்போது முஸ்லிம்கள் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அதிகம் பலி கொடுத்தால் அதிகம் பலன் கிடைக்கும். இதை நன்றாகவே புரிந்து கொண்டார் மோதி.
இந்த கேவல அரசியலுக்கும் கலைஞருக்கும் முடிச்சுப் போடுகின்றனர் சில கேவல பிறவிகள்.தமிழ்நாட்டில் இதுவரை எந்த பிராமணரும் கொல்லப்பட்டதில்லை.அவர்களுடைய தத்துவங்களையும்,கோட்பாடுகளையும் கொள்கையளவில் தான் கலைஞர் எதிர்க்கிறாரே தவிர வன்முறையை என்றும் கையில் எடுத்ததில்லை.
ஆரிய எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவையும் ஆரியர்களாலேயே உருவானது.இனவெறியையும்,சாதிவெறியையும் அப்பட்டமாக கடைப்பிடித்துக் கொண்டிருந்த அந்தக்காலத்தில் திராவிட இயக்க அரசியலின் தோற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
இன்னும் ஆரிய எதிர் அரசியலின் தேவை முடியவில்லை.சாதி,இன ரீதியாக தங்களை உயர்ந்தவர் என்று பறைசாற்றுவதில் பிராமணர்கள்
தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
பிராமணர்களை முதலிடத்தில் இருந்து வெளியேற்றியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களுக்கும் மெதுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.அதை முறியடிக்கும் முயற்சி தான் இந்து வெறியர்களால் பரப்பப்படும் முஸ்லிம் எதிர்ப்புணர்வு பிரச்சாரம்.
மோதி தன்னுடைய பொருளாதாரத் தத்துவங்களால் தான் வெற்றி பெற்றார் என்று சொல்வது முட்டாள்தனமானது.லாலுவின் ஆட்சியில்
தான் பீகார் காட்டுமிராண்டி தேசமானது என்று பரப்பப்படும் விஷமப் பிரச்சாரம் போன்றது தான் மோதி ஆட்சியில் குஜராத் வளர்ந்து
விட்டது என்ற பிரச்சாரமும்.நீண்ட நெடுங்காலமாகவே குஜராத்திகள் வணிகத்திலும்,பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கியவர்கள் தான்.
எனவே மோதியின் அரசியலையும்,கலைஞரின் அரசியலையும் ஒப்பிடுபவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க முடியும்.
Labels
- WHERE DO YOU WANT TO GO TODAY? (1)
- இந்திய தேசியம் (2)
- எய்ட்ஸ் (1)
- ஒலிம்பிக் (1)
Blog Archive
- November 2006 (2)
- December 2006 (1)
- March 2007 (2)
- April 2007 (1)
- June 2007 (10)
- July 2007 (10)
- August 2007 (4)
- September 2007 (9)
- October 2007 (5)
- November 2007 (6)
- December 2007 (4)
- January 2008 (1)
- March 2008 (2)
- April 2008 (2)
- May 2008 (2)
- June 2008 (1)
- August 2008 (2)
- September 2008 (3)
- October 2008 (2)
- November 2008 (4)
- January 2009 (1)
- February 2009 (1)
- May 2009 (2)
- June 2009 (1)
- July 2009 (1)
- October 2009 (1)
- January 2010 (1)
- June 2010 (1)
About Me
இது தான்டா 'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்


