கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, January 23, 2010

எம்சியாரின் கருணையுள்ளம்

மூளையால் ம‌ட்டுமே சிந்திப்பவர்கள் , எம்சியாரை கோமாளி என்று தூற்றுவது வழக்கம்.இதயத்தாலும் சிந்திப்பவர்களால் தான் எம்சியாரை புரிந்து கொள்ளமுடியும்.குலேபகாவலி என்னும் திரைப்படத்தில் புலியுடன் ஒன்டிக்கு ஒன்டி சண்டை போட நேரிடும் போது ,எம்சியார் நடந்து கொண்டவிதம் அவர் மீது பெருமதிப்பை ஏற்படுத்தி விட்டது.கையிலே கத்தியுடன் இருக்கும் எம்சியார்,புலி நிராயுதபாணியாக வருவது கண்டு கத்தியை கீழே போட்டுவிட்டு வெறுங்கைகளால் கட்டிப்புரண்டு சண்டையிடுவார்.புலி இறந்து விடாதிருக்கும் பொருட்டு கவனமாக சண்டை போடுவார்.ஒரு வழியாக புலியை மூர்ச்சையாக்கி விட்டு நடந்து போவார்.விசமத்தனத்தில் நம்பியாரை விடவும் மோசமான அந்தப்புலி மயக்கம் போட்டது போல் நடித்து,எம்சியார் நடந்து செல்லும் போது பின்பக்கமாக பாய்ந்து சென்று தாக்கும்.உடனே எம்சியார் ,கீழே கிடந்த கத்தியை எடுத்து குத்தி கொன்று விடுவார்.நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு குப்புறப்படுத்து தலையணையில் முட்டி அழுதேன்.அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த என் அப்பா,என் மனநிலையைப் புரிந்தவாறு "அதான்,சீ நாயேன்னு விட்டுட்டுப் போய்ட்டாருல்ல,அப்புறம் ஏன் பின்னாடி போய்க் கடிக்கிற,நல்லா வேணும்" என்று பின்னூட்டம் போட்டார்.அதோடு இன்னும் சில தகவல்களை சொன்னார்.ஒரு படத்தில் பெண் ஒருவருடன் கத்திச்சண்டை போடும் போது , இடது கையால் கத்தியைப் பிடித்து சண்டையிடுவாராம்.இன்னொரு படத்தில் ஒற்றைக்காலில்லாத ஒருவருடன் ,இவரும் ஒரு காலைக்கட்டிக்கொண்டு சண்டையிடுவாராம்.இப்பேர்ப்பட்ட மாவீரன் இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணம் ஏக்கப்பெருமூச்சாகி தொண்டையை அடைத்தது.இவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழக காவல் துறையை இலங்கைக்கு அனுப்பி ராசபக்சேயை கொன்றிருப்பாரே என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.கத்தியோடு தாக்க வருபவனிடம் கண்ணியமாக நடந்து கொள்வது எப்படி என்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.அவர்களுக்கு எம்சியார் படத்தைப் போட்டுக்காண்பிக்க வேண்டியது அரசின் கடமை.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்