கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, May 22, 2009

விசயகாந்த் வேதனை அறிக்கை.

//இந்தியாவின் மக்கள்தொகை 110 கோடி.தமிழ்நாட்டு மக்கள் தொகை 8 கோடி. மொத்த மக்கள்தொகையில் தமிழர்கள் 8 சதவீதம்.மத்தியில் அமையப்போகும் அரசின் அமைச்சர்கள் எண்ணிக்கை 80. தமிழ்நாட்டின் பங்கு 8 சதவீதப்படி 6.5 தமிழகத்திற்கு கிடைக்கவேண்டும்.தமிழக காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கியது போக 4.5 இடங்கள் தான் திமுகவிற்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் திமுக தலைவரோ 7 இடங்களுக்கும் அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கும் சவால் விடுகிறார்.இந்தப்போக்கை காங்கிரசுக்கட்சி அனுமதிக்கக்கூடாது.//

இவ்வாறு விசயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்தக்கருத்தை சோ வரவேற்றிருக்கிறார்.

Sunday, May 17, 2009

இந்தியா பிழைத்தது

செல்லும் வழியெங்கும் நச்சுக்கிருமிகளை விதைத்துச்செல்லும் நடமாடும் பிணம் அத்வானி ,பிரதமர் ஆகும் அபாயத்திலிருந்து நாடு தப்பித்துள்ளது.ஏற்கெனவே அத்வானியால் செலுத்தப்பட்ட நச்சுக்கிருமிகளால் ,இந்திய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருந்தது,அதனால் இந்தமுறை கிருமிகளால் பெரிய பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது.செயலலிதாவை பா.ச.க உடன் சேர விடாமல் ஏதோ ஒரு வகையில் தடுத்துதவிய கம்முனிச்சுடு தலைவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.123 ஒப்பந்தம் என்று யாருக்குமே புரியாத ஒரு விசயத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்த கம்முனிகளுக்கு மரண அடி.

//கலைங்ஞேன் என்ன குறை வச்சான் இவய்ங்களுக்கு,ரெண்டு,மூனு சீட்டுக்கு அந்தம்மா முன்னாடி போயி கையக்கட்டிக்கிட்டு , நிக்கிறாய்ங்க,வெக்கங்கெட்டவய்ங்க. 123 ஒப்பந்தம்,அணுஆயுதம் ஒப்பந்தம்,அதுக்காகத்தான் விலகுனோம் அப்படின்னு மேடை போட்டு பேசுனா எவனுக்காச்சும் வெளங்குமா, தோப்போம்னு தெரிஞ்சே மதுரையே கேட்டு வாங்கியாந்திருக்காய்ங்க, வெட்டிப்பயலுக,அதனால தான் தேர்தல் வேலைக்கே போகல// பத்து நாட்களுக்கு முன் மதுரை வேட்பாளர் மோகன் பிரச்சாரக்கூட்டத்தை கடந்து செல்கையில் ஆட்டோக்கார மார்க்சியர் புலம்பியது தான் இது.

ரத்னேஷ் அவர்களின் பதிவில் குறிப்பிட்டுள்ள படி திமுக,காங்கிரசு கூட்டணி சென்ற தேர்தலில் பெற்றிருந்த பலத்தை விட இம்முறை அதிகமாகவே பெற்றுள்ளது.ஒட்டுண்ணியான பாமக இல்லாததால் திமுகவிற்கு இன்னும் அதிக செல்வாக்கு மத்திய அரசிலே ஏற்படும். சுதந்திர இந்தியாவில் ,தமிழகத்தின் பொற்காலம் கடந்த ஐந்தாண்டுகள் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.இனியும் அப்படி ஒருகாலம் வருமா என்று மனக்கிலேசம் அடைந்திருந்தேன்,ஆனால் அதையும் விட அருமையான பொற்காலம் இனிமேல் தான் இருக்கிறது.இதையெல்லாம் சாதித்துக்காட்டிய கலைஞருக்கு தமிழினம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.கேவலமான அவதூறுகள்,பழிச்சொற்கள்,அபாண்டமான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டு ‘பாம்பு கடித்தால் திருப்பியா கடிக்கமுடியும்’ என்று கடந்து போன கலைஞரை புரிந்துகொண்டு அவருக்கான மரியாதையை அளித்துள்ளனர் மக்கள்.
தமிழினத்தலைவர் என்று மதிக்கப்படும் கலைஞர் மேல் காழ்ப்புகொண்டு நெடுமாறன்,ராமதாசு போன்றவர்கள் செய்த கேடுகெட்ட மொள்ளமாரித்தனங்கள் , இன்று அவர்களையே மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவது நசுக்கியுள்ளன.இப்போது வைகோ வரிசையில் இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் விசயகாந்தின் வரவு வைகோவுக்கு சாவுமணி அடித்தது,இந்தத்தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கும் அடித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கும் நலத்திட்டங்கள்,வளர்ச்சிப்பணிகள் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஈழப்பிரச்சினையை வைத்து கலைஞரைக் கேவலப்படுத்திய
அறிவுசீவிகள்,உணர்வாளர்கள்,இணைய புரட்சியாளர்கள்,அனைவரும் ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும்.
“தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது” .

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்